நவக்கிரகங்களில் ஒன்றான குருவை தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவர். சுபக் கிரகங்களின் வரிசையில் முதன்மை இடத்தை பெற்றவர். "குரு பார்க்க கோடி நன்மை". குருவின் கருணையால் அனைத்து துன்பங்களும் விலகும்.
"பொன்னன்" என்று அழைக்கப்படும் குரு தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவார். கடகம் குருவின் உச்ச வீடு. மகரம் நீச்ச வீடு. மஞ்சள் நிறம். பொன் உலோகம். புஷ்பராக கல்லுக்கு உரியவர். ஆண் கிரகம். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகன். பொன் நிறமானவர். இவரது புஷ்பம், மாலை, வஸ்திரம், குடை, கொடி, ரதம் எல்லாம் பொன்னிறமானதே. யானையை வாகனமாக கொண்டவர்.
  Gurupeyarchi palangal 2009

 ஸ்ரீ விரோதி வருடம், மார்கழி மாதம் 4-ம் தேதி, சனிக்கிழமை (19-12-2009) அன்று சுக்லபட்ச சதுர்த்தி, திருவோண நட்சத்திரம், வியாகாத யோகம், வணிஜ கரணம், இரவு 11 மணி 29 நிமிடத்துக்கு கும்ப ராசியில் குரு பெயர்ச்சியாகிறார்.

இந்த குருபெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய ஐந்து ராசிகளுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும், ரிஷபம், விருச்சிகம் ஆகியவற்றிற்கு நன்மையும், தீமையும் கலந்தும், கடகம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ஐந்து ராசிகளுக்கும் கொஞ்ச நன்மையும் தரும் விதம் அமைந்துள்ளது. ஆகவே கெட்ட பலன் நடக்கும் என்று எழுதியுள்ள ராசிக்காரர்கள் அச்சமோ, கலக்கமோ, குழப்பமோ அடைய தேவையில்லை. விதியை மதியால் வெல்லலாம். செயலால் வெல்லலாம். பரிகாரத்தால் வெல்லலாம். கெட்ட காலத்தை மாற்ற அகத்தியர் பரிகாரம் கூறியுள்ளார். அகத்தியர் கூறிய பரிகாரம் செய்தால் கெட்டவைகள் நடக்காது. நல்லகாலமாக மாறும். விதியை மாற்ற வல்லவர் அகத்தியர் ஒருவரே. அகத்தியர் துணை நமக்கு இருக்கும் போது நாள் என் செய்யும், கோள் என் செய்யும். விதியை நிறுத்தலாம் வாரீர். அகத்தியர் கூறிய பரிகாரத்தின் மூலம் நன்மை மாத்திரமே அனுபவிக்கலாம். அவரை முழுமையாக நம்பி, அவர் பரிகாரத்தை செய்யுங்கள். எல்லோரும் நலம் வாழ அவர் பரிகாரம் சொல்லியுள்ளார்.

   
உங்கள் ராசிக்கு நண்பனான குரு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கும், 12ஆம் இடமான விரைய ஸ்தானத்துக்கும் அதிபதி. 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்.
குரு 5-ஆம் பார்வையாக 3ஆம் இடத்தையும், 7ஆம் பார்வையாக 5ஆம் இடத்தையும், 9ஆம் பார்வையாக 7ஆம் இடத்தையும் பார்க்கிறார். சகோதர ஸ்தானம், புத்திர
ஸ்தானம்,  களத்திர ஸ்தானம் இவற்றை பார்க்கிறார்.

3ஆம் இடம் என்பது தைரிய ஸ்தானம்- தைரியம் அதிகமாகும். துணிச்சல் அதிகமாகும். சகோதர ஸ்தானம்- சகோதரர்களுக்கு நன்மை உண்டாகும். வெற்றி ஸ்தானம்- அதனால் வெற்றி கிடைக்கும். தொழில் விருத்தி ஸ்தானம்- அதனால் தொழில் விருத்தியாகும். எஜமான் ஸ்தானம்- ஒரு சிலர் எஜமானர் ஆகக்கூடிய நிலை ஏற்படும். பூமி விருத்தி ஸ்தானம்- ஒரு சிலருக்கு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நல்ல காரியம் ஸ்தானம்- ஆகவே நல்ல காரியம் சுபகாரியம் நடக்கும். திருமணம் ஆனவர்கள் இல்லற சுகங்களை அதிகமாக அனுபவிக்கும் காலம் ஆகும். ஞான ஸ்தானம்- ஞானத்தை அடைய நினைப்பவர்களுக்கு ஞானம் கிடைக்கும் காலம் ஆகும். புகழ் ஸ்தானம்- ஆதலால் புகழ் அதிகம் கிடைக்கும்.

5ஆம் இடம் புத்திர ஸ்தானம்- குழந்தை சிலருக்கு கிடைக்கும். சிலர் குழந்தைகள் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் காலம் ஆகும். பாக்கிய ஸ்தானம்- பாக்கியம் அதிகம் கிடைக்கும். சிலருடைய குழந்தைகளுக்கு திருமணம் நடக்கும். சிலருடைய குழந்தைகளுக்கு பதவி உயர்வு. சம்பள உயர்வு கிடைக்கும். பிரபு ஸ்தானம் என்றபடியால் பிரபுவைப்போல் வசதியாக வாழும் காலம் ஆகும். பாசம் ஸ்தானம் என்றபடியால் பாசம் குழந்தைகள் இடத்திலும், மனைவியிடத்திலும், உறவினர் இடத்திலும் அதிகமாகும். 5ஆம் இடமும் ஞான ஸ்தானம் ஆகையால் ஞானம் தேடி அலைபவருக்கு ஞானம் நிச்சயம் கிட்டும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் இறை அருள்தானே இறங்கும். இயற்கை சாதகமாகும். வெற்றியும் வாய்ப்புகள் தேடி வரும்.
7ஆம் இடம் களத்திர ஸ்தானம் என்பதால் மனைவிக்கு எல்லா நன்மைகளும் நடக்கும். இந்த கால கட்டத்தில் மனைவியின் மீது காதல் அதிகமாகும். இல்லற சுகத்தை அதிகம் அனுபவிக்கும் காலம். நண்பர்கள் ஸ்தானம் என்பதால் நண்பர்கள் வலிய வந்து உதவுவர். தொழிலில் புதிய நண்பருடன் கூட்டு சேர்ந்து தொழில் ஆரம்பிக்கும் காலம். வியாபார ஸ்தானம் ஆதலால் வியாபாரத்தில் வெற்றி உண்டாகும். மேலும் மேலும் வியாபாரம் பெருகும். விவாக ஸ்தானம் ஆதலால் ஒரு சிலருக்கு திருமணம் நடக்கும்.

7ஆம் இடம் பிரயாண ஸ்தானம் ஆனதால் ஒரு சிலருக்கு பிரயாணங்கள் அமையும். வெளிநாடு சுற்றிப் பார்க்கவோ, வேலைக்கோ செல்லும் நிலை உண்டாகும். நிலம், மனை, வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குரு 11ஆம் இடம் இருந்து பார்பதால் 3ஆம் இடம், 5ஆம் இடம், 7ஆம் இடத்தின் நன்மைகள் அதிகமாகும். புதிய தொழில் தொடங்கும் காலம். பங்குச் சந்தை வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தரும். புகழ் அதிகமாகும். புதிய ஒப்பந்தம் வரும்.
மே முதல் அக்டோபர் வரை குரு 12ஆம் இடமான மீன ராசியில் சஞ்சரிக்கும் காலம். தந்தைவழி உறவினர் உடல்நிலை கவலைக்கிடமாகலாம். சுபகாரிய தடை வரும்.

   
குரு உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றால் பிரச்சினை எழும். குழந்தைகளால் தொல்லை. பொருள் இழப்பு. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும். குரு 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 6-ஆம் இடம் பார்ப்பதால், 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானம் ஆனதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். தன ஸ்தானம் ஆகையால்
தனவிருத்தி உண்டாகும். அதிர்ஷ்டம் ஸ்தானம் ஆகையால் திடீர் திடீர் என்று பணம் கிடைக்கும். சினேகிதரால் வருமானம் உண்டாகும். வஸ்திரம் சேர்க்கை அதிகமாகும்.
4-ஆம் இடம், வீடு, மனை, வாகன ஸ்தானம் ஆகையால் வீடு, மனை, வாகனம் கடன் மூலம் வாங்கும் யோகம் உண்டாகும். தாய் ஸ்தானம் ஆகையால் தாயின் உடல் நலனுக்கு மருத்துவ செலவு செய்து ஆரோக்கியம் அடையும் நிலை உண்டாகும். புதையல் ஸ்தானம் என்பதால் ஒரு சிலருக்கு புதையலைப் போல் பணம் மொத்தமாக பல லட்சங்கள் கடனாகவோ, எப்படியோ கிடைக்கலாம். ஒரு சிலருக்கு தீர்த்த ஸ்தலங்களுக்கு செல்லும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு பால் பசு வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் அந்தஸ்து கூடும். வசதி அதிகமாகும். செல்வாக்கு அதிகமாகும்.
6-ஆம் இடமான எதிரிகள் ஸ்தானத்தை பார்ப்பதால் எதிரிகள் சமாதானத்துக்கு வருவார்கள். பங்காளிகளால் உதவி கிடைக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் ஸ்தானம் ஆகையால் கடன் கிடைக்கும். வீண் பழியில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். நோய் ஸ்தானம் ஆதலால் மருத்துவத்தின் மூலம் நோயில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். துன்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள். ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுவீர்கள். வேலை ஆட்கள் மூலம் நன்மை உண்டாகும்.
   
உங்கள் ராசிக்கு குரு 9-ல் சஞ்சாரம். ராசியாகிய 1-ஆம் இடம், 3-ஆம் இடம் தைரிய ஸ்தானம். 5-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் பார்க்கிறார். ராசியை பார்ப்பதால் மனக்கவலை அகலும். உடலில் புதிய அழகு தோன்றும். புகழ் உண்டாகும். மகிழ்ச்சி அதிகமாகும். கனவுகள் நனவாகும். புகழ் அதிகமாகும். செல்வம் அதிகமாகும்.
3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் வெற்றி கிடைக்கும். தொழில் விருத்தி உண்டாகும்.
நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். காரியங்களில் வெற்றி உண்டாகும். சாமார்த்தியமாக பேசும் திறன் உண்டாகும்.
5-ஆம் இடம் பிரயாண ஸ்தானம், தூரதேச ஸ்தானம். ஆகவே நீங்கள் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகலாம். அல்லது புத்திரர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகலாம். இஷ்ட தெய்வ ஸ்தானம். அதனால் இஷ்ட தெய்வம் உங்கள் இல்லம் தேடி வந்து உதவி செய்யும் காலம். கொடுக்கல் வாங்கல் நல்லபடி நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருடைய மகன், மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மேல் பாசம் அதிகமாகும். தர்ம காரியங்கள் அதிகம் செய்வார்கள். மந்திர சித்தி அடையும் காலம் ஆகும். வருமானம் அதிகமாகும் காலம்.
9-ஆம் இடம் மாளிகை மாதிரி வீடு அமையும். இறைபக்தி அதிகமாகும். தருமம் அதிகம் செய்வர். செல்வாக்கு அதிகமாகும். சிலருக்கு குரு உபதேசம் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இறை அருள் தானாக இறங்கும். நினைத்தது நடக்கும். இறைவன் கனவில் தோன்றுவார்.
   
உங்கள் ராசிக்கு 8-ல் குரு பயம் அதிகமாகும். அஷ்டமத்து குரு, சிலருக்கு மனைவியுடன் விரோதம், காரிய தடை, துன்பம் வரும். வீண் அலைச்சல், பண இழப்பு, மன வருத்தம் உண்டாகும். 12-ஆம் இடம் பார்வை. 12-ஆம் இடம் விரைய ஸ்தானம். செலவுகள் அதிகமாகும். சிலர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சிலர் பணம் செலவு செய்து சுற்றிப் பார்ப்பதற்காக வெளிநாடு செல்லக் கூடும். தானம் செய்யும்
நிலை உண்டாகும். மறைமுக எதிரிகள் தொல்லை வரலாம்.
கடன் வாங்க வேண்டி வரலாம். வழக்குகள் மூலம் பணம் இழக்க வேண்டி வரலாம். சொத்துக்கள் சிக்கலாகலாம். வரவேண்டிய பணம் வராமல் போகலாம். திடீர் திடீர் என்று பணம் கிடைக்கலாம்.
வியாபாரம் மந்தமாகலாம். சுபகாரியம் தடைப்படலாம். நோய் வலுத்து மருத்துவ செலவு அதிகமாகலாம். வாகன செலவு வரலாம். வெற்றி அடையாமல் போகலாம். கெட்ட கனவுகள் வரும். இனம்புரியாத கவலை உண்டாகும். அரசு தொல்லை வரும். அனாவசிய செலவு அதிகமாகும். எந்த விஷயமும் முற்றுப் பெறாத நிலை உண்டாகலாம். கணவன் மனைவி உறவில் பிரிவு ஏற்படலாம். சிலருக்கு திருட்டு போகலாம். கெட்ட பெயர் வரலாம். தேவையில்லாத பழி வரலாம். கடன் வாங்கி புதிய வாகனங்கள் வாங்கலாம். வீடு வாங்கலாம். நிலம் வாங்கலாம்.
   
ராசிக்கு 7-ஆம் இடத்தில் குரு. வருமானம் அதிகமாகும். திருமணம் ஆகாதவருக்கு திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபகாரியம் நடக்கும்.
குரு பார்வை 1-ஆம் இடம், 3-ஆம் இடம், 11-ஆம் இடம்.
சகோதரர்களால் நன்மை. சகோதருக்கு நன்மை. வெற்றி. தைரியம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் பெருகும். பூமி விருத்தி உண்டாகும். சிலருக்கு முதலாளி ஆகும் நிலை
உண்டாகும். தொழில் புரிபவர்கள் மேலும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கலாம். நிலம் விற்று லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகமாகும். வருமானம் பெருகும். நல்ல கனவுகள் தோன்றும். கனவு நினைவாகும். தைரியம் அதிகமாகும். செல்வம் பெருகும். மூத்த சகோதரருக்கு நன்மை உண்டாகும். சேவை மனப்பான்மை அதிகமாகும். வாகன சேர்க்கை உண்டாகும். சிலர் சாஸ்திரத்தில் புலமை அடையலாம். தொழில் லாபம் உண்டாகும். புகழ் அதிகமாகும். லாபம் அதிகமாகும். பணம் அதிகமாகும். உறவினர்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை அமையும். சிலருக்கு பொன்னாடை போர்த்தி பட்டங்கள் கிடைக்கும் நேரம் உருவாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். படிப்பிற்காகவோ, சுற்றிப் பார்க்கவோ, வேலைக்கோ வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெற்றி மேல் வெற்றி உங்களை வந்து சேரும். செலவுகளில் மட்டும் கவனமாக இருக்கவும்.
   
குரு 19-12-2009 முதல் உங்கள் ராசிக்கு ஆறாமிடமான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். 6-ஆம் இடம் சஞ்சரிக்கும் காலம், மருத்துவ செலவு செய்து உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்ளும் காலம். மனக்கவலை அதிகமாகும். கடன் அதிகமாகும். பணம் அனாவசியமாக செலவு ஆகும். கைக்கு பணம் வருவது தாமதம் ஆகும்.
12-ஆம் இடமான விரைய ஸ்தானத்தை பார்ப்பதால் கடன்களை அடைக்க வீட்டையோ,
நிலத்தையோ ஏதோ ஒன்றையோ விற்று அடைக்கும் நிலை வரலாம்.
10-ஆம் இடத்தை பார்ப்பதால் தொழிலுக்காக கடன் வாங்கி தொழில் விருத்தி செய்யலாம். மனைவியின் பெயரில் உள்ள சொத்தை விற்று பணம் பெற்று பிரச்சனையை தீர்க்கலாம்.
எதிர்ப்புகள் அதிகமாகலாம். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகலாம்.
ஏதோ ஒரு பொருளை விற்று, அல்லது இழந்து பணம் அதிகமாக கிடைக்கலாம். ஆடம்பர செலவுக்காக கடன் வாங்கலாம். எதிரிகளிடம் இருந்து சில சமயம் பணம் கிடைக்கும். வழக்குகளை சந்திக்க வேண்டி வரலாம். மறைமுக எதிர்ப்புகள் வரலாம். எதிர்பார்த்த அளவு வருமானம் வராமல் போகலாம்.
   
உங்கள் ராசிக்கு 5-ல் குரு. 5-ல் குழந்தை பாக்கியம். வருமானம் பெருகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இல்லற சுகம் இன்பமாக அமையும்.
செல்வாக்கு கெளரவம் உயரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். 5-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். 5-க்கு 5-ஆம் இடம், 9ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். 9-க்கு 5-ஆம் இடம், 1-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம்.
3 இடங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆவதால் இறைஅருள் வெகு விரைவாக இறங்கும். இயற்கை சாதகமாகும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். யோகத்திற்கு மேல் யோகம் வரும். வருமானத்துக்கு மேல் வருமானம் வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தைகளுக்கு நல்லது நடக்கும். இன்பம் அதிகமாகும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். லாபம் பெருகும். நிலம், வீடு, வாகனம் சேரும். மாட மாளிகை, கூட கோபுரம் கட்டும் யோகம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். சகோதரருக்கு நன்மை உண்டாகும். சகோதரர்கள் உதவி செய்வர். சிலருக்கு இளைய மனைவி கிடைக்கும். புகழ் கிடைக்கும். பட்டம் கிடைக்கும். மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். திருமணமான மகள் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
புதிய தொழில் செய்யும் யோகம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பேங்க் உதவி கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். அந்தஸ்து பெற்ற மனிதர்கள் வலிய வந்து உதவுவார்கள்.
   
4-ஆம் இடம் துன்பம் ஏற்படும். வருமானம் குறையும். வீண்பழி ஏற்படும். 5-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 9ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.
8-ஆம் இடம் வழக்கு ஸ்தானம் ஆகையில் தொழில் சம்பந்தமான வழக்குகளோ, சொத்து சம்பந்தமான வழக்கோ, பங்காளிகள் தகராரோ ஏற்பட்டு சமாதானமாகவோ,
கொஞ்ச இழப்புடனோ முடியலாம். 12-ஆம் இடம் விரைய ஸ்தானம் அதிகமாவதால் தொழில் செய்வதற்காக ஏதாவது சொத்தை விற்று தொழிலை விருத்தி செய்யலாம். தேவையற்ற கவலைகள் அதிகமாகலாம். எல்லா பிரச்சனைகளும் வழவழ கொளகொள என்று நடக்கலாம். தேவையற்ற வழக்குகள் உண்டாகலாம். தேவையில்லாத கவலை உண்டாகலாம். மனக்குழப்பம் அதிகமாகலாம். எந்த ஒரு செயலுக்கும் தீர்வு காண முடியாத நிலை வரலாம். ஒரு சிலருக்கு மனைவியுடன் விவாகரத்தோ, வழக்கோ ஏற்படலாம். பிரிந்து வாழும் நிலை ஏற்படலாம். உறவினர்களை பிரிந்து வாழும் நிலை உண்டாகலாம். திருடு போகலாம். பொருள் நஷ்டம் ஏற்படலாம். வீண்செலவு, தாயின் உடல்நிலை கெடும். கால்நடை, வளர்ப்பு பிராணிகளுக்கு துன்பம் ஏற்படும்.
பூர்வீக சொத்து தகராறு பொய் வழக்கு குற்றச்சாட்டு ஏற்படலாம். அனாவசிய செலவு அதிகமாகும். கடன் அதிகமாகும். சொத்து சம்பந்த வழக்கு இழுபறி ஆகும். எதிர்பாராத பண வரவும் வரக்கூடும். எதிரிகளால் தொல்லை ஏற்படும்.
   
ராசிக்கு 3-ல் குரு. 5- ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.
பூர்வீக சொத்து, உயில் போன்றவற்றால் ஆதாயம் கிட்டும். சொந்தமாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
திருமணம் நடக்காமல் இருந்தவருக்கு திருமணம் நடக்கும். புதிய நண்பர்கள்
கிடைப்பார்கள். தூர பயணம் உண்டாகும். ஜாமீன் யாருக்கும் கொடுக்க கூடாது. பணி உயர்வு கிடைக்கும். மேற் கல்விக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும். லாபம் அதிகம் உண்டாகும். தாயாரின் உடல்நிலை கெட்டு, வைத்திய செலவு செய்ய நேரிடும். வழக்கு வெற்றி தரும். மனைவிக்கு எல்லா நலன்களும் நடக்கும்.
லாப ஸ்தானத்தை குரு பார்பதால் அபரிமிதமான லாபம் உண்டாகும். மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்குவர். சிலருக்கு இளைய மனைவி கிடைக்கலாம்
   
ராசிக்கு 2-ல் குரு. 2-ஆம் இடம் தன ஸ்தானம்.
தன ஸ்தானத்தில் குரு வருவது தன விருத்தி. குடும்பத்தில் சந்தோஷம், நல்ல வாய்ப்புக்கள், வெற்றி மேல் வெற்றி.
2 - 6 - 8 - 10. குரு 5-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.
10-ஆம் வீட்டை பார்ப்பதால் தொழில் மேன்மை, பணவரவு கூடும். முயற்சியில் வெற்றி. பலரும் வியக்கும் வண்ணம் பணவரவு வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் அமையலாம். பெண்களால் உதவி கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிரிகள் ஒழிவர். எதிரிகளை வென்று வெற்றிவாகை சூடும் காலம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். லாபம் பெருகும். நிலம், வீடு, வாகனம் சேரும். மாட மாளிகை, கூட கோபுரம் கட்டும் யோகம் உண்டாகும். அரசு உதவி கிடைக்கும். சகோதரருக்கு நன்மை உண்டாகும்.
   
ஜென்மத்தில் குரு. 5- ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.
ஜென்ம குரு சிறப்பு இல்லை. ஜென்ம குரு துன்பம் தருவார். அதிகப்படியான செலவு உண்டாகும். பயணங்கள் உண்டாகும். 5-ஆம் இடம் பார்வை ஏற்படுவதால் குழந்தைகளுக்கு நன்மை ஏற்படும். குழந்தைகள் நன்மைக்காகவும், படிப்புக்காகவும்,
கல்யாணத்திற்காகவும், மகன், மகள் தேவைக்கான பணம் செலவு செய்ய வேண்டி வரும். மனைவிக்கு வீடு, சொந்தமாக வாங்கிக் கொடுக்கலாம். மனைவியின் பெயரில் தொழில் தொடங்கலாம். மனைவிக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். இயற்கை சாதகமாகும். மக்களுக்கு சொத்து வாங்கலாம். வெற்றிகளை கடின உழைப்பால் அடையலாம். அலைச்சல் அதிகமாகும். மனசஞ்சலங்கள் அதிகரிக்கக் கூடும். வார்த்தைகளில் கடினங்கள் இருக்கக் கூடாது. தொழிலில் அனுசரனையாக விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பாறை போல் இல்லாமல் நாணல் போல் இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை காட்டவும். விடா முயற்சி வெற்றியை தேடி தரும். பணம் வந்தாலும் பறந்து போகும் சூழ்நிலை உருவாகும். சிக்கனமாக செயல்படுவது மிகவும் அவசியம்.
   
குரு 12-ல் விரைய ஸ்தானத்தில். 5-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.
செயலில் தோல்வி. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலை. உணர்ச்சி வசப்படுவதால் துன்பம். வழக்கு, தனச்செலவு, பகை, உறவுகள் பகையாதல், வியாதி அதிகமாகும் நிலை. அதற்காக வைத்திய செலவு. தேவையற்ற தனச்செலவு.
தேவையில்லாத சிந்தனை, தேவையற்ற செயல், செயலால் தோல்வி. சொத்துக்கள் இழப்பு. சொத்துக்கள், வீடு, நிலம் விற்றல், பங்காளிகள் பகை, வழக்கு, தொழிலில் குழப்பம், துன்பம், தொழில் சரிவர நடத்த முடியாத நிலை. கடன் அதிகமாகும் நிலை. வழக்குக்காக நேரம் காலம் வீணாதல். வீண் வம்பு வழக்கு. கணவன் மனைவி சண்டை, பிரிவு, உல்லாசப் பயணத்தால் செலவு. வியாபாரத்தில் போட்டி ஏற்பட்டு சமாதானத்தில் முடியும் நிலை. திருட்டு போதல், பண இழப்பு, பெண்களால் கெட்ட பெயர், அவமானம், அரசால் தொல்லை, தாயாருக்கு வைத்திய செலவு, தொழில் முடக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
 
 
 
 
 
 
Advertisement
      Most Recent Articles
வெற்றி முகம் - அரிமா T.A.S. ராமī
Daily one Banana keeps your pressure dow
நமீதாவின் கவர்ச்சி அலை ஓ
சிநேகாவின் கவர்ச்சி
SUBSCRIBE TODAY
Click Image for Larger view
 
     Most Recent Archives
 
-
-
-
-
 
Recent Video
 
 
 
 
  Copyright © 2009 Clubstoday All rights reserved